??????? ????????? ...
Posted by ~Ray @ 2007-12-09 14:07:39
தமிழகத்தில் கருப்பு இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர்களில் தனித்து நிற்பவர் இந்திரன். அமெரிக்காவின் கருப்பின சிறுபான்மையினர் எதிர்கொள்கிற சிக்கல்களுக்கும் தலித்துகளின் சிக்கல்களுக்கும் நிறைய ஒப்புமைகளை இன்று உணரத்தலைப்பட்டிருக்கிற பலரும் அவருடைய பணியின் சிறப்பைப் புரிந்துகொள்ள முடியும். அப்படிப்பட்ட அவரது பங்களிப்பில் குறை கண்டுபிடிப்பது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது.அவருடைய அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம். Afro-American இலக்கியத்தையும் ஆப்பிரிக்கத் துணைக்கண்ட இலக்கியத்தையும் சேர்த்தே கருப்பு இலக்கியம் என்று அறிமுகம் செய்து வைக்கிறது. இரண்டுக்கும் சில ஒன்றுபடும் புள்ளிகள் இருந்தாலும் அவற்றின் தனித்தன்மைமிக்க அம்சங்கள் அழுத்தம் தரப்பட வேண்டியவை. அவை பற்றி இங்கு விரித்துச் செல்வது சாத்தியமில்லை என்பதால் அமெரிக்காவின் நிற-இனவெறிச் சூழல். ஆப்பிரிக்காவின் காலனிய-நவகாலனியச் சூழல் இவ்விலக்கியங்கள் பிரியத் தொடங்குகிற புள்ளியாகச் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்.மற்றது. கருப்பு தேசியத்தின் கருப்பு அழகியலை (color Nationalism. Black Aesthetics) - இந்திரனின் தொகுப்புக்கு Pan-African Nationalism. Negritude என்ற சொற்கள் பொருந்தும் - அதற்குள் ஊடுருவியிருக்கும் ஆண் மையப் பார்வையை அப்படியே ஏற்றுக்கொண்டு வைத்திருப்பது.
என்று உகாண்டா நாட்டு கவிஞனை மேற்கோள் காட்டி பண்பாட்டுச் சிதைவையும் புதிய அடையாளத்திற்கான அவர்களது தேடலையும் அறிமுகத்தில் விளக்குகிற இடத்தில் இது மிகவும் வெளிப்படையாகவே தன்னைக் காட்டிக் கொள்கிறது.இதன் தொடர்ச்சியாக. கருப்பு இலக்கியத்தை ஒற்றைத் தன்மையதாக (ஆண்-மைய. கருப்பு அழகியல்) வைத்திருப்பது. மனிதராகவே தம்மை மதிக்க மறுத்து. இழிவுபடுத்தும் அடையாளங்களைத் தம்மீது சுமத்திய அமெரிக்க வெள்ளை இனத்தவரின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் விடுதலை நோக்கி புதிய தன்மதிப்புமிக்க ஒரு அடையாளத்துக்கான தேடலின் போக்கில் எழுந்த இந்த - Afro - American Literature என்று தற்போது அழைக்கப்படுகிற - இலக்கியத்தில் பலதரப்பட்ட போக்குகளும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். தூய அழகியல்வாதிகள். யதார்த்தவாதிகள். சோஷலிச யதார்த்தவாதிகள். கருப்பு தேசியவாதிகள். பெண்ணியவாதிகள்..[ADVERTHERE]Related article:
http://vinaiaanathogai.blogspot.com/2007/08/blog-post.html
0 Comments:
No comments have been posted yet!
|